மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

கிராமங்களிலும் நம்மை நிரூபிக்க வேண்டும்: கமல்

கிராமங்களிலும் நம்மை நிரூபிக்க வேண்டும்:  கமல்

ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இது தொடர்பாக இன்று (ஆகஸ்டு 26) ஆலோசனை நடத்தினார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகியோருடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார் கமல்ஹாசன். இந்நிலையில் வருகிற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியீடுவது பற்றிய ஆலோசனையில் கமல் இன்று ஈடுபட்டார்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் பெரும் கட்சிகள் குறிப்பாக ஆளுங்கட்சியான திமுக தங்களது வேட்பாளர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகளில் இறங்கும். அதற்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் உண்மையான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இருக்கும் சவால் குறித்தும் இக்கூட்டத்தில் கமல் ஆலோசித்திருக்கிறார்.

“நம் கட்சியை நகர்ப்புறத்துக்குக் கட்சி என்று சிலர் முத்திரை குத்தப் பார்க்கிறார்கள். அதை பொய்யாக்கும் வகையில் ஊரகங்களில் அதாவது கிராமங்களிலும் நமது வலிமையை நிரூபிக்கும் வகையில் உள்ளாட்சித் தேர்தலை நாம் எதிர்கொள்ள வேண்டும். அதில் ஏற்படக் கூடிய சாதக, பாதக அம்சங்கள் குறித்து கருத்து சொல்லுங்கள்”என்று கமல்ஹாசன் கேட்டுள்ளார்.

பலரது ஆலோசனைக்குப் பின் இறுதியில் பேசிய கமல், “கிராமங்களை நோக்கி நாம் செல்வோம். வழக்கம்போல திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. மற்றவை பற்றி விரைவில் முடிவெடுப்போம்” என்றும் கூறியுள்ளார்.

கூட்டம் முடிந்ததும் தனது ட்விட்டர் பக்கத்தில், “ மக்கள் நீதி மய்யத்தின் தமிழக, பாண்டிச்சேரி நிர்வாகிகள், மாநிலச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் கட்சி வளர்ச்சிப் பணிகள், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினோம்”என்று குறிப்பிட்டுள்ளார்.

-வேந்தன்

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

வியாழன் 26 ஆக 2021