மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

ஆப்கன்: வீட்டுக் காவலில் கர்சாய், அப்துல்லா

ஆப்கன்: வீட்டுக் காவலில் கர்சாய், அப்துல்லா

தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்கக் கூடும் என்று பரவிய தகவலால், பல வெளிநாடுகள் தங்களது குடிமக்களை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றன.இந்நிலையில் தலிபான்கள் தாங்கள் சொன்னதற்கு மாறாக ஒவ்வொன்றாக செய்து வருகிறார்கள். “இனி எங்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் யாரும் எதிரிகள் இல்லை” என்று முதலில் அறிவித்த தாலிபான்கள், இன்று (ஆகஸ்டு 26) அந்நாட்டின் முன்னாள் அதிபர் கர்சாய், நல்லிணக்கத்துக்கான தேசிய குழுவின் தலைவர் அப்துல்லா அப்துல்லா ஆகியோரை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்களின்படி, தலிபான்கள் முன்னாள் அதிபர் கர்சாய்க்கு போடப்பட்டிருந்த ஆயுதப் பாதுகாப்பு குழுவிலிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்து, அவரது வாகனங்களை எடுத்துச் சென்றனர். இதேபோல அப்துல்லாவின் வீட்டையும் சோதனையிட்டு அவரது பாதுகாப்புப் படையினர் மற்றும் வாகனங்களையும் எடுத்துச் சென்றனர்.

கர்சாய் மற்றும் அப்துல்லா ஆகியோர் இப்போது காபூலில் பாதுகாவலர்கள் இல்லாமல் தலிபான்களின் தயவில் வீட்டுக் காவலில் உள்ளனர்.

கடந்த வாரம், தலிபான் செய்தித் தொடர்பாளர் ஆப்கானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்க விரும்புவதாக கூறினார். அதன் பின்னர் முன்னாள் அதிபர் கர்சாய் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாகி அப்துல்லா ஆகியோருடன் பேச்சுவார்த்தையும் தலிபான்கள் நடத்தினார்கள். இவர்கள் இருவரும் தலிபான்களால் தங்களுக்கு ஆபத்து நேராது என்று நம்பிதான் காபூலில் தங்கினர்.

அதேநேரம் ஆப்கன் அதிபராக தலிபான்கள் வரும்வரை இருந்த அஸ்ரப் கனி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தப்பிச் சென்றார். குடும்பத்தோடு அங்கே அவர் அடைக்கலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

-வேந்தன்

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வியாழன் 26 ஆக 2021