மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

புதிதாக 10 அரசு கல்லூரிகள்: பொன்முடி

புதிதாக 10 அரசு கல்லூரிகள்: பொன்முடி

தமிழகத்தில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

இன்று (ஆகஸ்ட் 26) நடைபெற்ற உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, “விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தர்மபுரி மாவட்டம் ஏரியூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வேலூர் மாவட்டம் ஆற்காடு ஆகிய இடங்களில் புதிதாக இருபாலர் படிக்கும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் புதிதாக அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தொடங்கப்படும்.

செங்கல்பட்டு, சேலம், கோவை, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், நந்தனம், திருப்பூர் அரசு கலைக் கல்லூரிகளில் ஆராய்ச்சி பாடப்பிரிவு தொடங்கப்பட உள்ளது” என்று அறிவிப்பு வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், அடுத்த கல்வியாண்டு முதல் சிவில் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டயப் படிப்புகள் தமிழ் வழியில் தொடங்கப்படும். அதன் தொடர்ச்சியாக இதர பட்டயப் படிப்புகளும் தமிழ் வழியில் தொடங்கப்படும். வெவ்வேறு பாடப் பிரிவுகளிலிருந்து 100 பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார்

மேலும், நவீன தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்களைச் சீரமைப்பது கல்வி வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. மாணவர்களின் அறிவுத்திறன் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளையும் மேம்படுத்தவும் போட்டித் தேர்வுகளுக்குத் தயார்ப்படுத்தவும் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் உயர் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்கள் திருத்தி அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி.

-பிரியா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

வியாழன் 26 ஆக 2021