மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

காழ்ப்புணர்ச்சியா? அம்மா உணவகம் இருந்திருக்காது: முதல்வர்

காழ்ப்புணர்ச்சியா? அம்மா உணவகம் இருந்திருக்காது: முதல்வர்

தமிழக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை என்பதற்கு அம்மா உணவகம் தான் உதாரணம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 26) உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்த விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்துப் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும் என நினைத்திருந்தால் அம்மா உணவகம் அதே பெயரிலிருந்திருக்காது. காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும் எந்த எண்ணமும் திமுக அரசுக்கு இல்லை. விழுப்புரம் பல்கலைக்கழக விவகாரத்தில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று தெரிவித்தார்.

ஆனால் முதல்வரின் விளக்கத்தை ஏற்காமல் சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, உயர் கல்வித்துறை மீதான மானிய கோரிக்கையில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட விவகாரத்தில் அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகக் கூறி உரையாற்றினார்.

ஜெயலலிதா பல்கலைக்கழகம் அதே பெயரில் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அமைச்சர் பொன்முடி ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என்று சொன்னார். இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கல்வியில் புரட்சி மற்றும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் அதனால் உயர் கல்வி கற்போரின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

ஜெயலலிதாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாகத் தான் விழுப்புரத்தில் அவரது பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆளுநரும் அதற்கு அனுமதி வழங்கி பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தரும் நியமிக்கப்பட்டார். இந்த சூழலில் தேர்தல் அறிவிக்கப்பட்ட காரணத்தால் பல்கலைக்கழகத்தை முழுமையாக நிறுவ முடியாத சூழல் ஏற்பட்டது.

ஜெயலலிதாவின் பெயர் இருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தாலேயே அவர்கள் பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைத்து இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

-பிரியா

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ...

6 நிமிட வாசிப்பு

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்!

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

5 நிமிட வாசிப்பு

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

வியாழன் 26 ஆக 2021