மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

சொத்துக்களை விற்பதில் ஒன்றிய அரசு பிஸியாக உள்ளது: ராகுல்

சொத்துக்களை விற்பதில் ஒன்றிய அரசு பிஸியாக உள்ளது: ராகுல்

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும். ஏனெனில், ஒன்றிய அரசு சொத்துக்களை விற்பனை செய்வதில் பிஸியாக இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலம் முதல் ஒன்றிய அரசு பெருந்தொற்றை கையாளும் விதம், தடுப்பூசி பற்றாக்குறை, விநியோகத் திட்டம், விலை நிர்ணயம் உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், National Monetisation pipeline என்ற தேசிய பணமாக்கும் திட்டத்தை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் வெளியிட்டார். அதன்படி, இந்திய அரசுக்கும், பொதுத் துறை நிறுவனங்களுக்கும் சொந்தமான சுமார் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை அடுத்த 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டு பணமாக்கப் போவதாக அறிவித்தார். இந்த திட்டத்துக்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து இன்று(ஆகஸ்ட் 26) ராகுல் காந்தி ட்விட்டரில்,”நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. எதிர்வரும் கொரோனா அலையில் மோசமான விளைவுகளை தடுக்க வேண்டுமென்றால், தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும்.

இந்த சூழ்நிலையில் ஒன்றிய அரசு சொத்துக்களை விற்பனை செய்வதில் பிஸியாக இருக்கிறது. அதனால், மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில்”கடந்த 70 ஆண்டுகளாக இந்தியர்கள் எதை கடினமாக உழைத்து உருவாக்கினார்களோ அதை தனது 7 நண்பர்களுக்கு அவர் அன்பளிப்பாக அளித்து வருகிறார்.” என்றும் “ அவர் வந்தார், அவர் பார்த்தார், அவர் விற்றார்” என்றும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

-வினிதா

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

வியாழன் 26 ஆக 2021