மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

கொடநாடு கொலை வழக்கு: சசிகலா முக்கிய ஆலோசனை!

கொடநாடு கொலை வழக்கு: சசிகலா முக்கிய ஆலோசனை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தீவிரமாகிவரும் நிலையில் கொடநாடு எஸ்டேட் பற்றிய முழு விவரங்கள் அறிந்த சசிகலா, இது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறார்.

கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்டது. அந்த வழக்கில் விசாரணை முடியும் தருவாயில், ஆட்சி மாறிய நிலையில் அவ்வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அது தமிழக சட்டமன்றத்தில் எடப்பாடிபழனிசாமி எதிர்ப்பு, அதிமுக வெளிநடப்பு, ஆளுநருடன் சந்திப்பு, சட்டமன்றத்தில் காங்கிரஸ் செல்வப்பெருந்தகை கவன ஈர்ப்புத் தீர்மானம் என பல திசைகளில் சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

நேற்று ஆகஸ்ட் 25ஆம் தேதி, மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகையில் கொடநாடு எஸ்டேட் கொலைகளும்...தமிழ்நாடு ஸ்டேட் தலைகளும்! என்ற தலைப்பில் வெளியான செய்தியில் அறை எண் 302 ஆதாரம்....அம்பலமானால் அதிமுகவுக்கு சேதாரம் என முக்கிய துருப்பு சீட்டாகக் கேரளா மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த செபஸ்டின் என்பவரைப் பதிவுசெய்திருந்தோம்.

சிஐடி காலனி சர்வீஸ் அப்பார்ட்மெண்டில் செபாஸ்டின் ட்ரைவிங் லைசன்ஸ் ஐடி கொடுத்து அறை போட்டவரைத் தேடி, நேற்று முன் தினம் ஆகஸ்ட் 24ஆம் தேதி, தமிழக போலீஸ் கேரளா சென்றனர். செபஸ்டின் அவர் வீட்டில் இல்லாததால் நேற்றும் காத்திருக்கும் போலீஸார், இன்று அல்லது நாளை தமிழகத்துக்கு அழைத்துவருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பின்னணியில், ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு சென்னை தி நகர் அபிபுல்லா வீதியில் தங்கியுள்ள சசிகலா தனது குடும்பத்தைச் சேர்ந்த தினகரன், இளவரசி, நடராஜன் சகோதரர், வழக்கறிஞர், விவேக் போன்றவர்களுடன் இரவு 2.00 மணி வரையில், கொடநாடு வழக்கு சம்பந்தமாக ஆலோசனைகள் செய்திருக்கிறார். கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவோடு தங்கியிருந்தவர் என்ற அடிப்படையில் அந்த எஸ்டேட் பற்றிய முழு விவரங்களும், சம்பவத்தில் கொள்ளை போன ஆவணங்கள் என்னென்ன என்பது பற்றியும் சசிகலாவுக்கே தெரியும்.

அந்த ஆலோசனை முடிவில் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளையைப் பற்றி ஜெயா டி.வி.யில் சிறப்பு பேட்டி கொடுக்கவும் தயாராகிறார் சசிகலா. அந்த பேட்டியில் சசிகலா வெளியிடும் தகவல்களால் கொடநாடு வழக்கு கூடுதல் வலுவடையும் என்கிறார்கள் சசிகலா வட்டாரத்தில்.

-வணங்காமுடி

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வியாழன் 26 ஆக 2021