மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஆக 2021

பயிர்க்கடனில் ரூ.516 கோடி முறைகேடு: அமைச்சர் ஐ.பெரியசாமி

பயிர்க்கடனில் ரூ.516 கோடி முறைகேடு: அமைச்சர் ஐ.பெரியசாமி

பயிர்க்கடன் தள்ளுபடியில் 516 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

2021-22ஆம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட் 25) சட்டப்பேரவையில் நடைபெற்றது.

அப்போது கடந்த ஆட்சியில் பயிர்க் கடனில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறியது குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, பயிர்க் கடனில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

இது தொடர்பாகப் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, பயிர்க் கடன் தள்ளுபடியைப் பொருத்தவரை 81 சதவிகித பேருக்கு ரசீது வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்கடனில் 516 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதில் சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 503 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சிட்டா அடங்களில் குறிப்பிட்ட சாகுபடி நிலங்களின் பரப்பளவு அதிகரித்துக் காட்டி பல மடங்கு கூடுதல் தொகை கடனாகப் பெற்றுள்ளனர். பயிரிடப்பட்ட பயிர் வகைகளைத் தவறாகக் குறிப்பிட்டு பன்மடங்கு பயிர்காப்பீடு பெற்றுள்ளனர்.

சேலத்தில் 12 தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை வங்கியில் 2,698 பேருக்கு ரூ.4.96 கோடி மட்டுமே வழங்க வேண்டும் என்ற நிலையில் ரூ.16.70 கோடி வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் சொந்த ஊரான கோச்சடையில் கூட முறைகேடு நடைபெற்றுள்ளது. அங்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாகக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 5 பவுன் வரை நகைக்கடன் பெற்றவர்களுக்குத் தள்ளுபடி என அறிவிக்கப்பட்ட நிலையில் 13.91 லட்சம் பேர் பல வங்கிகளில் ரூ.5,896 கோடி கடன் பெற்றுள்ளனர்.

முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்களின் பட்டியல் தயாராகி வருகிறது. தகுதியுள்ள நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான முடிவை முதல்வர் எடுப்பார்” என்று தெரிவித்தார்.

-பிரியா

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

புதன் 25 ஆக 2021