மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஆக 2021

மாநில வளர்ச்சிக் கொள்கை குழு பெயர் மாற்றம்!

மாநில வளர்ச்சிக் கொள்கை குழு பெயர் மாற்றம்!

மாநில வளர்ச்சிக் கொள்கை குழு மீண்டும் மாநில திட்டக்குழுவாக பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 1971ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த குழு கடந்த 2020ஆம் ஆண்டில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து, சமீபத்தில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவை திருத்தியமைத்து உத்தரவு பிறப்பித்தார். மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் மற்றும் முழுநேர, பகுதிநேர உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இக்குழுவினர் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு மாநில அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், மாநில கொள்கை வளர்ச்சிக் குழு என்ற பெயர், தற்போது மாநில திட்ட க் குழு என பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இக்குழுவுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதை பலரும் பாராட்டியதுபோல, இந்த அறிவிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

புதன் 25 ஆக 2021