மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஆக 2021

பாஜகவிலிருந்து மதன் ரவிச்சந்திரன் நீக்கம்!

பாஜகவிலிருந்து மதன் ரவிச்சந்திரன் நீக்கம்!

பாஜகவிலிருந்து மதன் ரவிச்சந்திரன் இன்று (ஆகஸ்ட்25) நீக்கப்பட்டார்.

பத்திரிகையாளரான மதன் ரவிச்சந்திரன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது அவர், தமிழக பாஜகவின் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் குறித்து பாலியல் ரீதியிலான வீடியோவை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த வீடியோ தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலோடு வெளியிடுவதாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து கே.டி.ராகவன் கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். இதுபோன்ற பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, கட்சி அளவில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

இந்நிலையில், மதன் ரவிச்சந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து பாஜக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

அதே வேளையில் பாஜக கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்துக்கள் தெரிவித்துள்ள மதன் மற்றும் வெண்பா ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.

கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ...

6 நிமிட வாசிப்பு

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்!

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

5 நிமிட வாசிப்பு

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

புதன் 25 ஆக 2021