மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஆக 2021

பென்னிகுயிக் இல்லமா? ஆதாரம் உள்ளதா?: முதல்வர்!

பென்னிகுயிக் இல்லமா? ஆதாரம் உள்ளதா?: முதல்வர்!

சென்னையில் உள்ள அண்ணா நூலகம் போல மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நூலகம் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் வாழ்ந்த இல்லத்தை அகற்றிக் கட்டுப்படுவதாகச் சர்ச்சை எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 25) நடைபெற்ற கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் குறிப்பிட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

பென்னிகுயிக் இல்லத்தை மாற்றி கலைஞர் நூலகம் அமைக்க உள்ளதாகத் தகவல்கள் வருகிறது என அவர் கூறியதும் குறுக்கிட்டுப் பேசிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எவ்வளவு குறுக்கீடு வந்தது என்பது நெஞ்சில் உள்ளது. இருப்பினும் நேற்று முதலமைச்சர் குறுக்கிட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார். பென்னி குயிக் வாழ்ந்த இல்லத்தை மாற்றி கலைஞர் இல்லம் அமைக்கப்படவில்லை. தவறான கருத்தைப் பதிவு செய்ய வேண்டாம்” என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “பென்னிகுயிக் இல்லத்தை அப்புறப்படுத்தி கலைஞர் நூலகம் கட்டுவதாக உறுப்பினர் கூறுவது தவறான கருத்து.

அது பென்னிகுயிக் இல்லம் என்பதற்கான ஆதாரம் இருந்தால் அரசு அடிபணியத் தயாராக இருப்பதாகவும் ஆதாரமில்லாமல் எதுவும் கூற வேண்டாம் என்றும் ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, செவி வழியாக வந்த செய்தியைப் பதிவு செய்தேன் என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர், செவி வழி செய்திகளைப் பேரவையில் பதிவு செய்வது பொருந்தத்தக்கது அல்ல என்று குறிப்பிட்டார்.

-பிரியா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

புதன் 25 ஆக 2021