மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 ஆக 2021

சென்னை 2.0: 500 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் நேரு

சென்னை 2.0: 500 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் நேரு

சென்னை 2.0 திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் கே.என்.நேரு நேற்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

நகராட்சி வளர்ச்சித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது பேசிய நகராட்சி வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு,

“சென்னை மாநகர கட்டமைப்பைச் சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்கில் சிங்கார சென்னை 2.0 என்னும் புதிய திட்டத்துக்கு, இந்த ஆண்டு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன், வேறு பலதிட்டங்களை இணைத்து சென்னை மாநகராட்சியில் பல்வேறு உட்கட்டமைப்புப் பணிகள் மற்றும் சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன” என்று தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நீர் நிலைகள் புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுது போக்கு மற்றும் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்துதல், பள்ளிக் கூடங்கள் மேம்படுத்துதல், கற்றல் மையங்கள், சாலைகள், தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள் கொண்ட “நமக்கு நாமே திட்டம்' செயல்படுத்தப்படும்.

நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் சென்னையில் உள்ள, இரண்டு மண்டலங்களிலும், ஏனைய மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலத்திலும், 7 நகராட்சி நிர்வாக மண்டலங்களில் தலா ஒரு நகராட்சி என 7 நகராட்சிகள், 37 மாவட்டங்களில் தலா ஒரு பேரூராட்சி வீதம் 37 பேரூராட்சிகளிலும் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னையை தவிர அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 74 லட்சம் வீடுகளில் இதுவரை 39 லட்சம் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளுக்கும் படிப்படியாகக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும், “போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 50 நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்கள் இந்த ஆண்டு அமைக்கப்படும்.

நகராட்சிகள், பேரூராட்சிகளில் சமுதாயக் கூடங்கள், சந்தைகள், நவீன நூலகங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் “கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளில் புதிதாக 20 மார்க்கெட்டுகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். திண்டுக்கல், ஓசூர், மாநகராட்சிகள், வாணியம்பாடி, குமாரபாளையம், ராசிபுரம், கரூர், காஞ்சீபுரம், தாம்பரம், சிதம்பரம், மேலூர், கொடைக்கானல், வெள்ளக்கோவில், சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, உதகமண்டலம், செங்கோட்டை, பத்மநாபபுரம், குழித்துறை, நாகப்பட்டினம் மற்றும் திருச்செங்கோடு ஆகிய நகராட்சிகளில் செயல்பட்டு வரும் 20 மார்க்கெட்டுகள், ரூ.65 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

உலகவங்கி நிதி உதவியுடன், சென்னையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில், 144 சாலைகளில் பழுதடைந்த மழைநீர் வடிகால்களுக்குப் பதிலாக புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படும். சென்னை மாநகராட்சியில் சாலைகள் மற்றும் நடைபாதைகள் ரூ.300 கோடியில் புதுப்பித்து மற்றும் மறு சீரமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

-பிரியா

சிங்காரச் சென்னை 2.0: ஸ்டாலின் கனவைச் செயல்படுத்தும் இருவர்!

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

புதன் 25 ஆக 2021