மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

தொண்டர்களுக்குக் கட்டளையிட்ட முதல்வர் ஸ்டாலின்

தொண்டர்களுக்குக் கட்டளையிட்ட முதல்வர் ஸ்டாலின்

உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

விழுப்புரம் அருகே திருமண விழா ஒன்றில் அமைச்சர் பொன்முடி வருகைக்காக திமுக கட்சி கொடிக் கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

13 வயது சிறுவன் குழந்தை தொழிலாளராகப் பணியமர்த்தப்பட்டதற்காக குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தெரிவித்திருந்தார்.

மேலும், சிறுவன் உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கமல், இதுபோன்ற கொடி கம்பம், பேனர் கலாச்சாரத்திலிருந்து கட்சிகள் விடுபட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஆகஸ்ட் 23) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது. விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி இளம் வயதான தினேஷ் மரணம் அடைந்திருப்பது எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களைப் பலமுறை கண்டித்த பின்னும் இதுபோன்ற விரும்பத்தகாத - கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கழகத்தினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். 13 வயதே ஆன தினேஷை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அவரது குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று, துணைநிற்கிறேன். இனி, இதுபோன்றவை நடக்காமல் தடுப்பதே உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

செவ்வாய் 24 ஆக 2021