மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

மானிய ஸ்கூட்டருக்கு வரவேற்பு இல்லை: அமைச்சர்!

மானிய ஸ்கூட்டருக்கு வரவேற்பு இல்லை: அமைச்சர்!

பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம் திட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், மானிய விலை இருசக்கர வாகன திட்டத்திற்கு போதிய வரவேற்பு இல்லை என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

அப்போது மானிய விலை ஸ்கூட்டர் குறித்துப் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தால் லட்சக்கணக்கான பெண்கள் பயன் அடைந்ததாகவும் அந்தத் திட்டம் குறித்து நிதிநிலை அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், “கடந்த காலத்தில் இந்த திட்டம் பணிக்கு செல்லும் பெண்களின் பயன்பாட்டிற்காக என்று குறிப்பிட்டிருந்தார்கள். இந்நிலையில் தேர்தல் காலத்தில் திமுக கொடுத்த வாக்குறுதியின் படி நகர பேருந்துகளின் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் அமல்படுத்தப்பட்டது. பெண்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தால் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், கடந்த ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மானிய விலை இருசக்கர வாகன திட்டத்திற்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என்றும் இது தொடர்பாக எந்த ஒரு கோரிக்கை மனுவும் பெறப்படவில்லை என்றும் பதிலளித்தார்.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

செவ்வாய் 24 ஆக 2021