மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த மே 7ஆம் தேதி ஆட்சிக்கு வந்தது. அன்றுமுதல் தற்போதுவரை முக்கிய மற்றும் உயர் பொறுப்பில் இருக்கும் பல அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்கள் முதல், நகராட்சி ஆணையர்கள் வரை என அனைத்து தரப்பினரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் உள்துறை கூடுதல் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று(ஆகஸ்ட் 24) பிறப்பித்த உத்தரவில், “சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அகாடமியின் இயக்குனராக பொறுப்பு வகிப்பவர் டிஜிபி பிரதீப் பிலிப். இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை கல்லூரியின் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆப்ரேஷன்ஸ் பிரிவின் ஏடிஜிபி அமல்ராஜ் ஐபிஎஸ்., சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அகாடமியின் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த உத்தரவு வரும் வரை ஆப்ரேஷன்ஸ் பிரிவின் ஏடிஜிபியாக அமல்ராஜ் நீடிப்பார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

9 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

செவ்வாய் 24 ஆக 2021