மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஆக 2021

அடுத்தடுத்து பாஜக தலைவர்களின் வீடியோக்களா? மதனுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

அடுத்தடுத்து பாஜக தலைவர்களின் வீடியோக்களா?  மதனுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

யூ ட்யூபரும் பாஜகவை சேர்ந்தவருமான மதன் ரவிச்சந்திரன் இன்று (ஆகஸ்டு 24) வெளியிட்ட வீடியோவில் தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவனின் சர்ச்சைப் பக்கங்களை வெளியிட்டார்.

மேலும் அவர், “இதுபோல் பாஜகவில் பல தலைவர்களின் வீடியோக்கள் என்னிடம் இருக்கின்றன. 60 வீடியோக்கள் வரை வைத்திருக்கிறேன். அவற்றை ஒவ்வொன்றாக வெளியிடுவேன். எனக்கு ஏதாவது ஆபத்து என்றால் அதற்கு ராகவனும், பாஜகவும்தான் காரணம்” என்று கூறியிருக்கிறார்.

மதனின் இந்த குற்றச்சாட்டுகள் பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது இன்றைய (ஆகஸ்டு 24) அறிக்கையில் பதிலளித்துள்ளார்.

“மதன் ரவிச்சந்திரன் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில் இதுபோல இன்னும் வேறு நபர்களின் பதிவுகளும் வர இருக்கிறது என்று சொல்லியிருப்பது அவருக்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்குமா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

பாரம்பரியத்தையும் மரபையும் கட்டிக்காக்கும் பாரதிய ஜனதா கட்சியில் பொறுப்பிலும் நிர்வாகத்திலும் இருக்கும் பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் கட்சியின் மாண்பு கருதி இதுபோல் குற்றம்சட்டப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் மலர்கொடி அவர்கள் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைத்து உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இந்த வீடியோ பதிவின் இறுதியில் தனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு ஒரு சில நபர்கள் தான் காரணம் என்று மதன் கூறியிருக்கிறார். நான் தொடர்ந்து மூன்று முறை வலியுறுத்தியும் கட்சியின் தலைவருக்கும் அமைப்பு செயலாளருக்கும் ஆதாரங்களை காட்சி படுத்தாமல் தன் சொல்லை மட்டும் நம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய மதன் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு பாரதிய ஜனதா கட்சி எப்படி பொறுப்பேற்க முடியும் அவரவர் செயலுக்கும் அவரவர் நடவடிக்கைக்கும் அவரவர் தான் பொறுப்பேற்க வேண்டும்”என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

-வேந்தன்

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

செவ்வாய் 24 ஆக 2021