மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 ஆக 2021

கொடநாடு வழக்கு: சசிகலா, எடப்பாடியையும் விசாரிக்க மனு!

கொடநாடு வழக்கு: சசிகலா, எடப்பாடியையும் விசாரிக்க மனு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் கொடநாடு கொலை வழக்கு குறித்து மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கில் தன்னையும் சேர்க்கச் சதி நடப்பதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசினர்.

இந்நிலையில் கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதில், “கொடநாடு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்பி முரளி ரம்பா, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆகியோரையும் விசாரிக்க வேண்டும்.

எஸ்டேட்டில் காணாமல்போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா இளவரசிக்குத் தான் தெரியும். எடப்பாடி பழனிசாமி தொடர்பு பற்றி பேசி உள்ள நிலையில் அதன் தீவிரத்தைப் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது. புலன் விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளாமல் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-பிரியா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

திங்கள் 23 ஆக 2021