மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 ஆக 2021

கொடநாடு கொலை- அதிமுகவுக்கு ஏன் அச்சம்? -செல்வப் பெருந்தகை கேள்வி

கொடநாடு கொலை- அதிமுகவுக்கு ஏன் அச்சம்? -செல்வப் பெருந்தகை கேள்வி

கொடநாடு விவகாரம் குறித்து விவாதிக்க அதிமுக ஏன் பயப்படுகிறது என்று காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். கொடநாடு கொலை வழக்கு குறித்து சட்டமன்றத்தில் இன்று (ஆகஸ்டு 23) கவன ஈர்ப்புத் தீர்மானம் அளிக்கப் போவதாக ஏற்கனவே ஊடகங்களில் செல்வப் பெருந்தகை தெரிவித்திருந்த நிலையில், இன்று சட்டமன்றத்தில் அது குறித்த தீர்மானத்தை கொடுத்திருக்கிறார்.

முன்னதாக அதிமுகவின் ஜெயக்குமார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, “செல்வப் பெருந்தகை மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவற்றையும் சட்டமன்றத்தில் விவாதிக்கலாமா என்று கேள்வி எழுப்ப முடியுமா?” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை,

“இந்த வழக்கில் இருக்கும் கேள்விகள் சயன், மனோஜ் ஏன் 90 நாட்களில் பிணையில் வெளிவந்தார்கள்? எதற்காக பத்திரிகையாளர்களை டெல்லியில் சந்தித்தார்கள்? இதுபற்றி ஆவணப் படம் எடுத்த மேத்யூசை கைது செய்ய ஏன் தமிழ்நாடு போலீஸ் டெல்லி விரைந்தது? ஏன் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது? இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் என்னைப் பற்றி பேசுவது ஏன்? நாங்கள் ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொடுக்கிறோம். தைரியம் இருந்தால் திராணி இருந்தால் சட்டமன்றத்துக்கு வந்து, ‘இதுபற்றி நாங்கள் விவாதிக்கத் தயார்’ என்று சொல்ல வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு காலையிலேயே பிரஸ் மீட் வைத்து என்னைப் பற்றி பேச வேண்டியது ஏன்?

ஜெயலலிதாவை உண்மையிலேயே நேசிக்கும் தொண்டர்கள் எனக்கு தொடர்புகொண்டு இந்த விவாதம் பற்றி முயற்சி செய்வதற்காக நன்றி தெரிவிக்கிறார்கள். ஆனால் எதற்காக இவர்கள் அச்சப்படுகிறார்கள்? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்த ஆட்சி நீதி வழங்கும். ஒருவேளை அதிமுகவை சேர்ந்தவர்கள் சட்டமன்றத்தில் விவாதிக்கத் தயாராக இல்லையென்றால் மக்கள் மன்றத்தில் விவாதிப்போம்”என்று பதிலளித்தார் செல்வப் பெருந்தகை.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 23 ஆக 2021