மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 23 ஆக 2021

கொடநாடு கொலை வழக்கு: மன உளைச்சலில் எடப்பாடி- ஜெயக்குமார் ஓப்பன் டாக்

கொடநாடு கொலை வழக்கு: மன உளைச்சலில் எடப்பாடி- ஜெயக்குமார் ஓப்பன் டாக்

கொடநாடு கொலை வழக்கு குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பதற்காக இன்று (ஆகஸ்டு 23) விதி எண் 55 இன் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவதாக ஆகஸ்டு 20 ஆம் தேதி தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று சட்டமன்றம் தொடங்குவதற்கு முன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், முன்னாள் பேரவைத் தலைவருமான அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார்,

“ சட்டமன்றம் என்பது மரபுகள், மாண்புகள் வாய்ந்தது. சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக செல்வப் பெருந்தகை அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக இந்த கொடநாடு பிரச்சினையை குறிப்பிட்டிருக்கிறார். கொரோனா, குடிநீர் பிரச்சினை, அடிப்படை கட்டமைப்பு பிரச்சினை, இயற்கை இடர்பாடு, தீ விபத்து, வெள்ளம் போன்றவைதான் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள்.

ஆனால் மரபை மீறி நடைமுறை விதியை மீறி நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு பற்றி எந்த காலத்திலும் விவாதித்தது கிடையாது. நானும் பேரவைத் தலைவராக இருந்திருக்கிறேன். சட்டம் இடம் கொடுக்காத நிலையில் விதி இடம் கொடுக்காத நிலையில் மரபுகள் இடம் கொடுக்காத நிலையில் இதை சட்டமன்றத்தில் விவாதிக்கக் கூடாது” என்றார் ஜெயக்குமார்.

”முதலில் இந்த பிரச்சினையை அதிமுகதானே அவையில் எழுப்பியது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதானே அவையில் பேசினார். அதன் பின் வெளிநடப்பு செய்தீர்கள், ஆளுநரை சந்தித்தீர்கள். அவசர பொதுமுக்கியத்தும் இல்லாத பிரச்சினை என்றால் ஏன் வெளிநடப்பு செய்தீர்கள்? ஏன் ஆளுநரை சந்தித்தீர்கள்?” என்ற கேள்விக்கு,

“இது சட்டமன்ற உறுப்பினரின் உரிமை மீறல் பிரச்சினை. தனது உரிமையைப் பெறுவதற்காக அவர் சட்டமன்றத்தில் இதை முறையிட்டார். நீதிமன்றத்தில் இந்த வழக்கு தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கிறது. இதில் விவாதிக்க அவசியம் என்ன? ஓர் உறுப்பினரின் (எடப்பாடி பழனிசாமி) சுதந்திரத்தை லாக் செய்து, எதிர்க்கட்சித் தலைவருக்கு மன ரீதியான துன்புறுத்தலை அளித்து சுதந்திரமாக பேச முடியாத சங்கடத்தைக் கொடுக்க சட்டமன்றத்தை பயன்படுத்துகிறார்கள். அதனால் எங்கள் எதிர்ப்பை வேறு எப்படிக் காட்ட முடியும்? எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வெளிநடப்பு செய்தோம். இது உறுப்பினரின் உரிமை தொடர்பானது. சட்டமன்றத்தில் விதி எண் 66, 92 இன்படி நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம் குறித்து விவாதிக்க முடியாது என்பது தெளிவாக இருக்கிறது” என்றார் ஜெயக்குமார்.

-வேந்தன்

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

திங்கள் 23 ஆக 2021