மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையம்: அமைச்சர் மா.சு

24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையம்: அமைச்சர் மா.சு

நாளை முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ்நாட்டில் முதன்முறையாக 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று (ஆகஸ்ட் 21) தொடங்கி வைத்தார். அத்துடன், அமெரிக்கா வாழ் தமிழர்கள் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட 2 கோடி 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி குறிப்பிடத்தக்க இலக்கை எட்டி கொண்டுள்ளது. முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதுபோன்று சுற்றுலாத் தலங்கள் உள்ள பகுதிகளிலும் முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அந்தவகையில் கொடைக்கானலில் 100 சதவிகிதமும், பழனியில் 98 சதவிகிதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 60 கிராமங்களில் 100 சதவிகிதத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.

முதன்முறையாக டிஎம்எஸ் வளாகத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய தடுப்பூசி மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. வெளிநாடுகளுக்குச் செல்வோர், வேலைக்குச் செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாளை (ஆகஸ்ட் 23) முதல் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய தடுப்பூசி மையம் நடைமுறைக்கு வரவுள்ளது. இத்திட்டம் 37 மாவட்டங்களில் தொடங்கப்படும். அதுபோன்று, இன்று முதல் சென்னையில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணியும் தொடங்கப்படவுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் எளிமையான முறையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், அதேவேளையில் தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்க வாழ் தமிழர்கள் அறக்கட்டளை சார்பில் ரூ. 2.36 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் 15 மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளுக்குப் பிரித்து அனுப்பப்படும்” என்று கூறினார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 22 ஆக 2021