மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

சட்டப்பேரவை நேரலையைத் தொடங்க வேண்டும்: கமல்

சட்டப்பேரவை நேரலையைத் தொடங்க வேண்டும்: கமல்

தமிழக சட்டப்பேரவை மீண்டும் நாளை (ஆகஸ்ட் 23) தொடங்கி நடைபெறவுள்ள நிலையில், விவாதங்களை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 21ஆம் தேதியோடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது செப்டம்பர் 13ஆம் தேதியோடு முடிக்கப்படும் என்று மாற்றியமைக்கப்பட்டது.

தற்போது மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் நாளை சட்டப்பேரவை கூடுகிறது. நாளை நடைபெறும் நீர்வளத் துறை மீதான விவாதத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசவுள்ளனர்.

அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 24ஆம் தேதி உள்ளாட்சித் துறை, ஆகஸ்ட் 25 அன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, ஆகஸ்ட் 26 அன்று உயர்கல்வி, பள்ளிக் கல்வித் துறை, ஆகஸ்ட் 27அன்று நெடுஞ்சாலைகள், கட்டடங்கள் (பொதுப்பணி) துறை ஆகஸ்ட் 28 அன்று வேளாண்மை, கால்நடை, மீன்வளம், பால்வளத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெறுகிறது.

இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பட்ஜெட் மீதான முழு விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மானியக் கோரிக்கை விவாதம் துவங்கப்போகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு நாளை முதலாவது தொடங்க தமிழக முதல்வர் ஆவன செய்யவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

ஞாயிறு 22 ஆக 2021