மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா

செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலுக்கு திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மூன்று மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. அவற்றுள் ஒரு இடத்திற்கு மட்டும் செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த முகமது ஜானின் மறைவைத் தொடர்ந்து அந்த ஒரு இடத்திற்கு செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதற்காக ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா போட்டியிடவுள்ளார்.

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே சட்டப்பேரவையில் போதிய பலத்தோடு திமுக உள்ளதால் எம்.எம்.அப்துல்லா எம்.பி.யாகத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அவர் திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி இணை செயலாளராக உள்ளார்.

-பிரியா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

ஞாயிறு 22 ஆக 2021