மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்!

மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்!

தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.

1945ஆம் ஆண்டு இலக்குமி ராகவன் அலமேலு தம்பதியினருக்கு ஏழாவது குழந்தையாகப் பிறந்தவர் இல.கணேசன். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவர் அண்ணன்களின் அரவணைப்பில் வளர்ந்தார்.

தஞ்சாவூரை சேர்ந்த இவர், 1993 ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரானார். பின்னர் அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் ஆனார்.

37 ஆண்டுகளாக பாஜக செயற்குழு உறுப்பினராக இருக்கும் அவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்தவர்.

பின்னர் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். எனினும் 2016ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்திலிருந்து பாஜக அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கியது.

இதைத்தொடர்ந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பைத் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாகக் கவனித்து வரும் நிலையில் அந்தப் பொறுப்பு கணேசனுக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் தற்போது மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி அம்மாநில ஆளுநராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா ஓய்வுபெற்ற நிலையில் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்திலிருந்து மற்றொரு பாஜக தலைவரும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

ஞாயிறு 22 ஆக 2021