மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

இருபாலர் கல்விக்கு தடை: தலிபானின் முதல் ஃபத்வா

இருபாலர் கல்விக்கு தடை: தலிபானின் முதல் ஃபத்வா

ஆப்கானிஸ்தானில் ஆகஸ்டு 15 முதல் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளனர். இன்னும் முறையான அரசாங்கம் அமைக்கப்படாத நிலையில் தலிபான்கள் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்ததுமே, ‘பெண்களின் உரிமை மதிக்கப்படும்’என்று வாக்குறுதியளித்தனர் தலிபான்கள். ஆனால் மலாலா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அச்சப்பட்டபடியே பெண்களின் கல்வி தொடர்பான கட்டுப்பாடுகளை இப்போது அறிவிக்கத் தொடங்கியுள்ளனர் தலிபான்கள்.

ஆப்கானில் உள்ள ஹெராட் மாகாணத்தில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இணை கல்விக்கு அதாவது ஆண்-பெண் இருபாலரும் இணைந்து கற்கும் முறைக்கு தடை விதித்திருக்கிறது தலிபான் இயக்கம்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தலிபான் அதிகாரிகளுக்கிடையேயான சந்திப்பின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் முக்கிய செய்தி நிறுவனமான காமா பிரஸ் செய்தி நிறுவனம் நேற்று (ஆகஸ்டு 21) தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களின் மூன்று மணி நேர சந்திப்பின்போது தலிபான்களின் உயர்கல்வி தலைவரான முல்லா ஃபரித்,

“ஆணும் பெண்ணும் சேர்ந்து பயிலும் இருபாலர் கல்வி முறை முடிவுக்கு வரவேண்டும். நல்லொழுக்கமுள்ள பெண் விரிவுரையாளர்கள் பெண் மாணவர்களுக்கு மட்டுமே கற்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆண் மாணவர்களுக்கு அல்ல. இருபாலர் கல்விதான் சமூகத்தின் அனைத்து தீமைகளுக்கும் வேர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தலிபான்களின் ஆட்சி முடிவுக்கு வந்த 2001 இல் இருந்து கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருபாலர் கல்வி நடந்து வந்தது. இந்த நிலையில் தலிபான்கள் இதை முதல் நடவடிக்கையாக தடை செய்துள்ளனர். இதனால் அரசுப் பல்கலைக் கழகங்களுக்கு பாதிப்பு இல்லையென்றாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் பெண்களுக்கு தனி வகுப்பு, ஆண்களுக்கு தனி வகுப்பு என்ற முறையால் கடுமையாக பாதிக்கப்படும் என்கிறார்கள் ஆப்கன் கல்வி வட்டாரத்தில்.

அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, ஹெராட் மாகாணத்தில் தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 40,000 மாணவர்களும் 2,000 விரிவுரையாளர்களும் உள்ளனர். கடந்த வாரம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் விரைவாகக் கைப்பற்றிய பின்னர், இது முதல்' ஃபத்வா என அழைக்கப்படுகிறது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

ஞாயிறு 22 ஆக 2021