மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 22 ஆக 2021

போக்குவரத்துத் துறையில் வாரிசுகளுக்குப் பணி: அமைச்சர்

போக்குவரத்துத் துறையில் வாரிசுகளுக்குப் பணி: அமைச்சர்

தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறையில் வாரிசு தாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற விழாவில் 16 புதிய வழித்தடங்களில் போக்குவரத்து சேவையை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று (ஆகஸ்ட் 21) தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 1.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சத்தியமூர்த்தி காலனி அருகில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மோட்டார்வாகன அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், “அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட 2000 பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படும். தற்போது 16,650 பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

கொடநாடு விவகாரம் குறித்துப் பேசிய அவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடநாடு விவகாரத்தில் தமிழக அரசின் மீது நிறையக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். யார் தவறு செய்திருந்தாலும் தண்டனை வழங்குவது நிச்சயம் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர், “தற்போது உள்ள சூழலில் கடன் வாங்காமல் அரசை நடத்த முடியாத சூழல் உள்ளது. எனினும் சரியான முறையில் வட்டி கட்டி அதிக அளவில் கடன் பெறாமல் இருந்தால் ஓரளவு சுமுகமாகச் செல்ல முடியும். 2.45 லட்சம் கோடி ரூபாய் கடன் 5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

போக்குவரத்துத் துறையில் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையில் பணி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஸ்சிடிசியில் 1800 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறையும் உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு முதல்வரிடம் கலந்தாலோசித்து வாரிசு தாரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மீறி வசூலிப்பவர்கள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

-பிரியா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

ஞாயிறு 22 ஆக 2021