மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

விற்பனை பத்திரங்கள் வழங்க சிறப்பு முகாம் : அமைச்சர் முத்துசாமி

விற்பனை பத்திரங்கள் வழங்க சிறப்பு முகாம் : அமைச்சர் முத்துசாமி

மூன்றுநாள் சிறப்பு முகாம் நடத்தி நிலுவையில் உள்ள விற்பனை பத்திரங்கள் பயனர்களுக்கு வழங்கப்படும் என்று வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி நேற்று(ஆகஸ்ட் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வீட்டுவசதி வாரியத்தில், வீடு, மனைகள், கடைகளுக்கான ஒதுக்கீடு பெற்று, தவணை செலுத்தி முடித்தவர்கள், விற்பனை பத்திரம் பெறாமல் இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்தது. இதுவரை கொடுக்கப்படாமல் நிலுவையில் உள்ள விற்பனை பத்திரங்களை உடனடியாக கொடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 1,021 விற்பனை பத்திரங்கள் பயனர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியை வேகப்படுத்த மாவட்டம்தோறும் சிறப்பு முகாம்களை நடத்தி விற்பனை பத்திரங்களை கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 24, 25, 26 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். எனவே, விற்பனை பத்திரம் பெறாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். விற்பனை பத்திரம் பெற வருபவர்கள் அவர்களிடத்தில் உள்ள அனைத்து விதமான ஆவணங்களையும் முகாமிற்கு எடுத்து வர வேண்டும். முகாம் குறித்த கூடுதல் விவரங்களை 188-599-6060 என்ற இலவச தொலைபேசி எண் மூலம் தெரிந்து கொள்ளலாம். வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள இட பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு அதனை விற்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “ வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டிதரப்படும் குடியிருப்புகள் என்ன நிலையில் உள்ளது என்பது குறித்து கடந்த மூன்று வாரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். சிதிலமடைந்த வீடுகளை மாற்றி கட்டி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், இரண்டு மூன்று ரகம் உள்ளது. மக்கள் தரப்பில் கூறப்படுகின்ற அனைத்து பிரச்சினைகளையும் சீரமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

-வினிதா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

சனி 21 ஆக 2021