மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

பள்ளிகள், திரையரங்குகள் திறப்பு: கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

பள்ளிகள், திரையரங்குகள் திறப்பு: கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

தமிழகத்தில் பள்ளிகள், திரையரங்குகள் திறப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தமிழக அரசு இன்று (ஆகஸ்ட் 21) மாலை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் பள்ளிகள், திரையரங்குகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும். மதிய உணவுத் திட்டமும் செயல்படும். 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளைத் திறப்பது குறித்து செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.

அதுபோன்று அனைத்து கல்லூரிகளும் சுழற்சி முறையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து பட்டய படிப்பு வகுப்புகளும் சுழற்சி முறையில் நடைபெறும்.

ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் 50 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்படும். திரையரங்க பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.

உயிரியியல் மற்றும் தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

கடைகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

ஐடி மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம்.

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் மதிய உணவுத் திட்டத்துக்காகச் செயல்பட அனுமதிக்கப்படும்.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது போக்குவரத்துக்கு அனுமதி.

மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதி.

நீச்சல் குளங்கள் 50% பயிற்சியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.

தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 21 ஆக 2021