மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

பப்ஜி மதன்: குண்டர் சட்டம் உறுதியானது!

பப்ஜி மதன்: குண்டர் சட்டம் உறுதியானது!

பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் இன்று உறுதி செய்தது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விபிஎன் என்ற தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாகப் பேசிக் கொண்டே விளையாடியதுடன், ஆபாச பேச்சுகளுடன் யூடியூப் தளம் நடத்தியதாக பப்ஜி மதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகம், புளியந்தோப்பு காவல் நிலையம், முதலமைச்சர் தனிப் பிரிவிலும், சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கும் புகார்கள் வந்தன.

இந்த புகாரின் பேரில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் 32 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 150க்கும் மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில் 32 பேர் மட்டுமே எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்ததாகவும் 1600 பக்க குற்றப்பத்திரிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆகஸ்ட் 12ஆம் தேதி தாக்கல் செய்தனர்.

இதனிடையே ஆகஸ்ட் 6ஆம் தேதி மதன் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் தொடர்பான விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் நடைபெற்றது. அப்போது அறிவுரை கழகத்தில் மதன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அறிவுரைக் கழகத்தின் உறுப்பினர்கள் ரகுபதி, ராமன் மற்றும் மாசிலாமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்ற விசாரணையின் போது மதன் தரப்பில், “தான் தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடவில்லை எனவும், தன்னால் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது, பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீக்க அறிவுரைக் கழகம் மறுத்துள்ளது. கடந்த ஜூலை 6ஆம் தேதி மதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்ட நிலையில் அதனை அறிவுரைக் கழகம் இன்று உறுதி செய்துள்ளது.

-பிரியா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

சனி 21 ஆக 2021