மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

பள்ளிகள், திரையரங்குகள் திறப்பா?

பள்ளிகள், திரையரங்குகள் திறப்பா?

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பதா அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பதா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 21) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1600 அதிகமாகவே பதிவாகி வருகிறது. சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு லேசாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனையின் போது, பள்ளிகள் திரையரங்குகளைத் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்க திட்டமிட்டு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது. இதனால் 50 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகளைத் திறக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

எனவே பள்ளிகள், திரையரங்குகள் திறப்பது பற்றியும், தொற்று எண்ணிக்கை அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாகவும், கொரோனா மூன்றாம் அலை வரலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாமா என்பது குறித்து ஆலோசித்ததாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

சனி 21 ஆக 2021