மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 21 ஆக 2021

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

கொரோனா விதிமுறைகளை மீறியதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லையில் விடுதலைப் போராட்ட வீரரான ஒண்டி வீரன் 250ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு விமானம் மூலம் தூத்துக்குடி வந்த ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து இருவரும் சாலை மார்க்கமாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டி வீரனின் மணிமண்டபத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவர் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ, மூத்த நிர்வாகிகள் சி.பி.ராதாகிருஷ்ணன், துரைசாமி, மாவட்டத் தலைவர் ஆ. மகாராஜன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “100 நாட்களில் தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதை செய்யாமல், திமுக அரசு எதிர்க்கட்சிகள் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக நடவடிக்கை எடுத்து வருவது மக்களிடையே சலிப்பை ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனா விதிகளை மீறியதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 95 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவும் வகையில் கூட்டத்தைக் கூட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

-பிரியா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

சனி 21 ஆக 2021