மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் சோனியா: இன்று ஆலோசனை!

எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் சோனியா: இன்று ஆலோசனை!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று (ஆகஸ்டு 20) ராஜீவ் காந்தியின் பிறந்தநாளன்று 14 எதிர்க்கட்சித் தலைவர்களோடு முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடரில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட்டுப் போராடிய நிலையில் இந்த ஒற்றுமையையும் போராட்டத்தையும் அப்படியே நாடாளுமன்றத்துக்கு வெளியே மக்கள் மன்றத்திலும் நீட்டிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரும்புகிறார். அதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டிருப்பதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து எதிர்க்கட்சிகளை அணிதிரட்ட ஸ்டாலினுடன் பேசிய சோனியா என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் ஆகஸ்டு 12 ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதன்படியே காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.

‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நடக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழக காங்கிரஸ் தலைவர்களும் உறுதி செய்துள்ளனர்.

குறைந்தபட்சம் 14 எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம்,இந்தக் , கூட்டத்திற்கான அழைப்பு ஆம் ஆத்மி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அனுப்பப்படவில்லை என்று தெரிகிறது.

காங்கிரஸ் வட்டாரத்தில் இதுகுறித்துப் பேசியபோது, “கொரோனா தொற்று நோயை கையாண்ட விவகாரத்தில் மோடி அரசின் செயல் திறன், தடுப்பூசி பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி, விவசாயிகள் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு...எதிர்க்கட்சிகள் சார்பில் தீர்மானம் அல்லது கூட்டறிக்கை வெளியிடப்படலாம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நாடு தழுவிய அளவில் பாஜகவை வலிமையோடு எதிர்ப்பதற்கு காங்கிரஸ் தலைமையிலான ஒற்றை அணியே சரியாக இருக்கும் என்ற செய்தியை வெளிப்படுத்துவதற்கான கூட்டமாக இது அமையும்” என்கிறார்கள்.

-வேந்தன்

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

வெள்ளி 20 ஆக 2021