மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 20 ஆக 2021

இந்திய தூதரகங்களில் தலிபான்கள் சோதனை!

இந்திய தூதரகங்களில் தலிபான்கள் சோதனை!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள், அங்கே அரசாங்கத்தை எப்படி அமைப்பது என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்னொருபக்கம் தங்களது வழக்கமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் ஷரியாத் சட்டத்தின்படியான இஸ்லாமிய ஆட்சிதான் நடக்கும், ஜனநாயகம் இருக்காது என்று தலிபான்களே தெளிவுபடுத்திவிட்ட நிலையில், கடைசி அமெரிக்கர் ஆப்கானிஸ்தானில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்படும் வரை, அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடென் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தலிபான்கள் காந்தஹார் மற்றும் ஹெராட் ஆகிய நகரங்களில் இருக்கும் மூடப்பட்ட இந்திய துணைத் தூதரகங்களுக்குச் சென்றனர். காந்தஹார் இந்திய தூதரகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர் தலிபான்கள். அங்கே இருக்கும் அலமாரிகளை முழுவதுமாக ஆய்வு செய்து பல பேப்பர்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் இரு தூதரகங்களிலிருந்தும் நிறுத்தப்பட்ட வாகனங்களை எடுத்துச் சென்றனர். ஜலாலாபாத்தில் உள்ள இந்திய துணை தூதகரத்திலும் தலிபான்கள் சோதனையிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது ஒருபக்கமென்றால் இன்னொருபக்கம் காபூல் நகரில் வீடு வீடாக ஆய்வுப் பணிகளை ஆரம்பித்துவிட்டார்கள் தலிபான்கள். நேஷனல் டைரக்டரேட் ஆஃப் செக்யூரிட்டி என்ற கடந்த ஆட்சியில் இருந்த தேசிய பாதுகாப்பு இயக்ககத்தில் பணியாற்றிய ஆப்கானியர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தேடும் பணியையும் மேற்கொண்டுள்ளனர்.

காபூலில் இருந்து வரும் தகவல்களின்படி தலிபானின் துணைத் தலைவர் சிராஜுதீன் ஹக்கானியின் சகோதரர் அனஸ் ஹக்கானியின் தலைமையில் ஹக்கானி நெட்வொர்க்கின் கிட்டத்தட்ட 6,000 பணியாளர்கள் தலைநகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

அனஸ் ஹக்கானி முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய், தேசிய நல்லிணக்கத்துக்கான உயர் மட்டக் குழுவின் தலைவர் அப்துல்லா மற்றும் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி அமைப்பின் நிர்வாகி குல்புதீன் ஹெட்மத்யார் ஆகியோரை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

விரைவில் அதிபர் மாளிகையில் நடக்க இருக்கும் நிகழ்வில் தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதேரிடம் அதிகாரத்தை கர்சாய் மற்றும் அப்துல்லா இருவரும் முறையாக ஒப்படைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 20 ஆக 2021