மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 19 ஆக 2021

தொடர்ந்து வாய்தா கேட்பதா? ராஜேந்திர பாலாஜிக்கு கண்டனம்!

தொடர்ந்து வாய்தா கேட்பதா? ராஜேந்திர பாலாஜிக்கு கண்டனம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 2011- 2013ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் தனது பதவியைப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அவர் மீது மதுரை, தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2014 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கில் 2021 மார்ச் 4ஆம் தேதி, நீதிபதிகள் எம் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு தீர்ப்பு வழங்கியது. இரு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்புகளை வழங்கினர்.

நீதிபதி சத்யநாராயணன், ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வழக்கைப் பதிந்து விசாரிப்பது, செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போலாகும். மேற்கொண்டு விசாரித்தால் எந்தவிதப் பலனும் இருக்காது என்று கூறி இவ்வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார்.

கடந்த ஜூலை 16ஆம் தேதி, இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, அனைத்து தரப்பு சார்பிலும் வழக்குத் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யக் கால அவகாசம் கேட்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, விரைவில் இறுதி விசாரணை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார் ராஜேந்திர பாலாஜி. 3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள ராஜேந்திர பாலாஜி, தனது மனுவில் விதிகளின்படி மாறுபட்ட தீர்ப்பு வழங்கும் போது அதற்குரிய காரணங்களை விளக்கமாக நீதிபதிகள் தெரிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு விளக்கம் அளித்தால் மட்டுமே 3வது நீதிபதி விசாரிக்க முடியும். எனவே இந்த விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு இன்று (ஆகஸ்ட் 19) சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில், இந்த வழக்கை விசாரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டதாகவும், எனவே இந்த விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, தொடர்ந்து வாய்தா கேட்பதா? என கேள்வி எழுப்பினார். மேலும், உச்ச நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளவில்லை எனில், விசாரணை தொடர்ந்து நடைபெறும் என கூறி வழக்கை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வியாழன் 19 ஆக 2021