மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 ஆக 2021

யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பு பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கட்டிடத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கேபி பார்க் குடியிருப்பு கட்டிடம் தரமற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்தக் கட்டிடத்தின் சுவர்கள், லிப்ட், குடிநீர் குழாய்கள் என அனைத்தும் சிதிலமடைந்து மோசமாக இருப்பதாக அங்குக் குடியிருப்பவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பான காட்சி, ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. இந்த கட்டுமானத்தின் தரத்தை சோதித்து அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கே.பி.பார்க் கட்டிடத்தின் தரத்தை சிறப்புக்குழு அமைத்து சோதனை செய்யக் குடிசை மாற்று வாரியம் தரப்பில் திட்டமிடப்பட்டது. இந்த கட்டிடத்தை ஆய்வு செய்யச் சென்னை ஐஐடிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி இன்று கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு வசிக்கும் மக்களின் குறைகளையும் கேட்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், "குடிசை மாற்று வாரியத்தின் அனுமதி பெற்றுக் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகாலமாக இந்த கட்டிடத்தைச் சென்னை மாநகராட்சி பயன்படுத்தியது. அதன்பிறகு மக்களை இங்கு குடியமர்த்தும் வகையில், ஒன்றை மாதத்துக்கு முன்பு நான், அமைச்சர் சேகர் பாபு, இந்த தொகுதி எம்.எல்.ஏ. பரந்தாமன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, குடிநீர், கழிவு நீர் குழாய்கள் உடைந்திருந்தன. லிப்ட் வேலை செய்யவில்லை. இதையெல்லாம் சரி செய்து ஆடி மாதத்திற்குப் பிறகு அனைவரும் குடியமர்த்தப்படுவர் என்று சொல்லிவிட்டுப் போனோம்.

தற்போது இந்த கட்டிடத்தின் தரம் குறித்து புகார்கள் வந்துள்ளன. கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடம் என்பதால், இந்த கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்ய ஐஐடிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இதில் யாரேனும் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “மக்களுக்கு போதிய அளவில் பாதுகாப்பு இருக்கிறது என்று தெரியவந்தால் தான் இங்கு குடியமர்த்தப்படுவார்கள். ஐஐடி அறிக்கை வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். இந்தக் கட்டிடத்தில் குடியேற அரசு அனுமதிக்கவில்லை. அவர்களாகவே குடியேறியுள்ளனர். ஆடி மாதம் முடிந்த பிறகுதான் குடியமர்த்துதல் பணிகள் செய்வதாக இருந்தது. சிமெண்ட் பூச்சில் ஏற்பட்ட பாதிப்பு சரி செய்யப்பட்டு வருகிறது” என்றார்.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

புதன் 18 ஆக 2021