மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 ஆக 2021

எம்எல்ஏ அலுவலகத்தில் சட்டவிரோத கட்டிடம்: இடிக்க உத்தரவு!

எம்எல்ஏ அலுவலகத்தில் சட்டவிரோத கட்டிடம்: இடிக்க உத்தரவு!

சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் சட்டவிரோத கட்டுமானத்தை உடனடியாக இடிக்க சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த டி.விஜயபாரதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் அலுவலக வளாகத்தில் மாநகராட்சி அனுமதியின்றி சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

அரசு நிலத்தில் தனிநபர்கள் கட்டுமானங்களை உருவாக்குவது சட்டவிரோதம். இது தொடர்பாக கடந்த ஜூலை 9 ஆம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையர், 15வது மண்டல அதிகாரிகள் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனது மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து சட்டவிரோத கட்டிடத்தை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று(ஆகஸ்ட் 18) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி தரப்பில், தனது அலுவலக வளாகத்தில் கூட்ட அரங்கத்தை கட்டுவதற்கு தொகுதி எம்எல்ஏ கோரிக்கை வைத்தார். அதை பொதுப்பணித்துறை செய்து கொடுக்காததால், அவரே சொந்த செலவில் கூட்ட அரங்கை கட்டி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தீவிரமான அராஜக செயலுக்கான முகாந்திரம் இருப்பதாக கண்டனம் தெரிவித்தனர். எவ்வளவு உன்னதமான நோக்கமாக இருந்தாலும், அரசு துறைகள் கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதற்காக, சட்டத்தை உருவாக்குபவர்களே அதை கையில் எடுத்து செயல்பட முடியாது என்று தெரிவித்தனர்.

அரசு நிலத்தில் தனிநபரால் கட்டப்பட்டு வரும் கட்டுமானத்தை இடிப்பதற்கு தேவையான தகுந்த உடனடி நடவடிக்கைகளை எடுக்கும்படி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வேறு காரணங்களுக்காக அந்த இடம் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தினர்.

மேலும், சட்டவிரோத கட்டுமானத்தின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

புதன் 18 ஆக 2021