மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 ஆக 2021

பாலியல் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற மறுப்பு!

பாலியல் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற மறுப்பு!

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

முன்னாள் தமிழக சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி. ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது போலீஸ் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கை சிபிசிஐடி காவல்துறை விசாரித்து வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றமும் தாமாக முன் வந்து வழக்கு விசாரணையை எடுத்துக்கொண்டு டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் இவ்வழக்கை முடிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே கடந்த ஜூலை 29 ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி, பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் எஸ். பி.கண்ணன் இருவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்பு ஆஜரானார்கள். அப்போது, குற்றப்பத்திரிக்கையின் நகலை ராஜேஷ் தாஸ் பெற்றுக்கொண்டார்.

இதனிடையே, இந்த வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார் ராஜேஷ் தாஸ்.

இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 18) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, “காழ்ப்புணர்ச்சியோடு போலீஸ் அதிகாரிகள் செயல்படுவதால் வழக்கில் எனக்கு நியாயம் கிடைக்காது. என் மீதான பாலியல் புகார் வழக்கு விசாரணையைத் தமிழகத்தில் இல்லாமல் வேறு மாநிலத்துக்கு மாற்றவேண்டும். எனக்கு எதிரான வழக்கின் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் ’’ என்று ராஜேஷ் தாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 18 ஆக 2021