மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 18 ஆக 2021

தமிழ்நாடு மின்மிகை மாநிலமா?: செந்தில் பாலாஜி

தமிழ்நாடு மின்மிகை மாநிலமா?: செந்தில் பாலாஜி

இலவச மின்சாரத்துக்காக நான்கரை லட்சம் விவசாயிகள் காத்திருப்பதாகச் சட்டமன்றத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

நிதிநிலை பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. அப்போது, பேசிய அதிமுக உறுப்பினர் சம்பத்குமார் திமுக ஆட்சிக்கு வந்தாலே அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக அரசின் மின் நிறுவு திறன் 80 சதவிகிதத்துக்கு மேல் இருந்தது. அது படிப்படியாக குறைந்து 50 சதவிகிதத்துக்கு வந்துவிட்டது. பத்தாண்டுகளுக்கு முன் திமுக ஆட்சிக் காலத்தில் இலவச மின்சார இணைப்பு இரண்டு லட்சத்து நான்கு ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

ஆனால், கடந்த 2011 முதல் 2016ஆம் ஆண்டுகளில் 87,000 விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இலவச மின்சாரத்துக்காக 4.52 லட்சம் விவசாயிகள் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலம் என்று சொன்னீர்களே... இவர்களுக்கு மின் இணைப்பு வழங்கி இருக்கலாமே. கடந்த 9 மாதங்களாக மின்சாரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது அந்தப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் சம்பத்குமார், கடந்த ஆட்சியில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. அப்போது மின் கட்டணம் செலுத்தாதவர்கள் இப்போது மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "பயன்பாட்டுக்கு ஏற்ப தான் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று கூறுவது முற்றிலும் தவறானது" என்று கூறினார்.

-பிரியா

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ...

6 நிமிட வாசிப்பு

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்!

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

5 நிமிட வாசிப்பு

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

புதன் 18 ஆக 2021