மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

ஏன் நாடு திரும்பினேன்? ஆப்கன் இந்திய தூதர் விளக்கம்!

ஏன் நாடு திரும்பினேன்? ஆப்கன் இந்திய தூதர் விளக்கம்!

ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு இடையே இன்று (ஆகஸ்டு 17) காலை காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் தூதர் மற்றும் ஊழியர்கள் இன்று இந்தியா வந்து சேர்ந்தனர்.

ஒரு சிறப்பு விமானப்படை விமானத்தில் ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திர டாண்டன், மற்ற ஊழியர்கள் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையினர் ஆகியோர் இன்று குஜராத் மாநிலம் ஜாம் நகர் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர்.

இந்தியாவில் தரையிறங்கியதும் செய்தியாளர்களிடம் பேசிய ஆப்கானுக்கான இந்திய தூதர்,

"இந்திய விமானப் படையின் செயல்பாடு எங்கள் அனைவரையும் காப்பாற்றியுள்ளது. இந்த சூழ்நிலையில் எங்களை வெளியேற்றிய இந்திய விமானப்படைக்கு நன்றி" என்று கூறினார்.

மேலும் அவர், “நாடு திரும்புவது எவ்வளவு பெரியது என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இரண்டு வார தீவிர வேலைக்குப் பிறகு, மிகவும் சிக்கலான சூழ்நிலைக்கு பிறகு இங்கே வந்துள்ளோம். நாங்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளோம். மொத்தம் 192 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து மூன்று நாட்களுக்குள் இரண்டு கட்டங்களாக மிகவும் ஒழுங்கான முறையில் வெளியேற்றப்பட்டோம், "என்று அவர் மேலும் கூறினார்.

”மேலும் அங்கே சிறிய எண்ணிக்கையிலான இந்திய குடிமக்கள் தங்கியுள்ளனர். அவர்களை திரும்ப அழைத்து வர அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதனால் காபூலில் விமான நிலையம் செயல்படும் வரை காபூலுக்கு ஏர் இந்தியா தனது வணிக சேவைகளை தொடர்ந்து இயக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

தூதரகத்தை காலி செய்தது பற்றி குறிப்பிட்ட ருத்ரேந்திரா, "நாங்கள் ஆப்கானிஸ்தானின் மக்களைக் கைவிடவில்லை. அவர்களுடனான எங்கள் உறவு தொடர்கிறது. நாங்கள் அவர்களுடன் எங்கள் தொடர்பைத் தொடர முயற்சிப்போம்”என்றார்.

அதேநேரம் காபூலில் இந்திய தூதரகம் முழுமையாக மூடப்படவில்லை என்றும் அங்கே உள்ளூர் ஊழியர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்திய தூதரகமும் தலிபான்களின் கண்காணிப்பில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தியா திரும்புவதற்கு 1,650 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு இருந்ததால், தஜிகிஸ்தானில் உள்ள அய்னி விமானப்படை தளத்தில் இந்தியா தனது சி -17 விமானங்களை நிறுத்தியது. இன்றும் இந்திய விமானங்கள் அய்னி விமான தளத்தில் தயார் நிலையில் இருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து அதிகமான இந்தியர்களை வெளியேற்றுவதற்காக விமானங்களை வாடகைக்கு எடுப்பது பற்றியும் இந்தியா ஆராய்வதாக இந்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-வேந்தன்

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

செவ்வாய் 17 ஆக 2021