மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

தொட்டாலே உதிர்கிறது: ஒப்பந்ததாரர் யார்?

தொட்டாலே உதிர்கிறது: ஒப்பந்ததாரர் யார்?

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்குச் சொந்தமான புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரமாக இல்லாததைக் கண்டித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், புதிய கட்டிடத்தை ஒப்பந்ததாரரின் பணத்தில் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

சென்னை அரும்பாக்கம் கூவம் நதிக்கரையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் வசித்து வந்த பொதுமக்களுக்குப் புளியந்தோப்பு அருகே கே.பி.பார்க் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. 9 அடுக்கு கொண்ட கட்டிடத்தில் 946 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.

ஆனால் இந்த கட்டிடம் தரமானதாக இல்லை என அங்குக் குடியிருப்பவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அங்குள்ள தூண்களில் பூசப்பட்டிருக்கும் சிமெண்ட் பூச்சுகள் கொட்டுவதாகவும், தரைதளம் எல்லாம் ஓடு போன்று எடுத்துக்கொள்வதாகவும் குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “புளியந்தோப்பு கே.பி. பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதிய செலவுக் கணக்கு சுமார் 15 லட்சம். 1000 ரூபாய் எலெக்ட்ரிக் ஷேவருக்குக் கூட ஓராண்டு கேரண்டி உண்டு.

இதைக் கட்டிய ஒப்பந்தக்காரரை உடனடியாக விசாரிக்கவேண்டும். மொத்த கட்டிடத்தையும் இடித்துவிட்டு அதே ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாகக் கட்ட வைக்க வேண்டும். அரசு இக்கட்டிடத்தின் உறுதியை நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

செவ்வாய் 17 ஆக 2021