மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

எழுவர் விடுதலையில் எந்த முடிவும் எடுக்க முடியாது : நீதிமன்றம்!

எழுவர் விடுதலையில் எந்த முடிவும் எடுக்க முடியாது : நீதிமன்றம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

29 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவில், '14 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறையிலிருந்த பலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் என்னை விடுதலை செய்யவில்லை. தொடர் சிறைவாசம் காரணமாக மன உளைச்சலோடு உடல் நலனும் பாதிக்கப்படுகிறது.

எழுவர் விடுதலை தொடர்பாகத் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. இவ்விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தும் பலனில்லை.

தமிழக சிறைகளில் உள்ள 1,600 ஆயுள் தண்டனை கைதிகளின் விடுதலை தொடர்பான மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் எங்கள் மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படாமல் உள்ளன. எனவே எழுவர் விடுதலை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது விரைவில் முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் நிஷா பானு அமர்வில் இன்று (ஆகஸ்ட் 17) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி முன் விடுதலை கோரி தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எழுவர் விடுதலை தொடர்பாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அரசு காத்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், “மனுதாரர் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்க முடியாது. மனுதாரர் கோரிக்கை தொடர்பாக ஏதாவது முடிவெடுக்கப்படும் நிலையில் அந்த முடிவின் மீது அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்” என்று தெரிவித்தனர்.

-பிரியா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

செவ்வாய் 17 ஆக 2021