மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

வேலுமணியை அடுத்து வீரமணி: அறப்போரின் அடுத்த அட்டாக்!

வேலுமணியை அடுத்து வீரமணி: அறப்போரின் அடுத்த அட்டாக்!

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீதான அறப்போர் இயக்கத்தினரின் புகார்களின் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு 10 ஆம் தேதி வேலுமணியை குறிவைத்து 60 இடங்களில் ரெய்டு நடத்தியது. அவர் மேல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்னொரு முன்னாள் அமைச்சரான கே.சி. வீரமணி மீது அடுத்தகட்ட புகார்களை அடுக்கியிருக்கிறது அறப்போர் இயக்கம். முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருக்கிறார் என்று ஆதாரங்களோடும் ஆவணங்களோடும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள் அறப்போர் இயக்கத்தினர்.

இதுகுறித்து இன்று (ஆகஸ்டு 17) அறப்போர் இயக்கத்தின் அமைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,

“கே.சி. வீரமணி தனது உறவினர்களின் பெயர்களில் சொத்துகளை வாங்கி தனது பெயரில் செட்டில்மென்ட் செய்திருக்கிறார். பல சொத்துகளை வாங்கி ஒரு சில மாதங்களில் ஒரு சில வருடங்களில், ஏன் ஒரே நாளில் தன் பெயருக்கு செட்டில்மெண்ட் செய்திருக்கிறார்.

சென்னை சாந்தோமில் ஒரு வீடு அவரது தாயார்பெயரில் வாங்கப்பட்டு அதே நாளிலேயே அவரது பெயரில் செட்டில்மென்ட் செய்யப்பட்டிருக்கிறது. பத்திரப் பதிவுத் துறை அமைச்சராகவே இருந்துகொண்டு பத்திரப் பதிவு நெறிமுறைகளை மீறியிருக்கிறார். வழிகாட்டு மதிப்பை விட குறைவான மதிப்பை செலுத்தி வாங்கியதன் மூலம் அரசுக்கும் பத்திரம் மூலம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கே.சி.வீரமணி மற்றும் கே.சி.வீரமணியின் தாயார் சேர்ந்து ஆர்.எஸ், எஜுகேஷனல் சாரிடபிள் டிரஸ்ட் இருக்கிறது. இதற்கு 106 ஏக்கர் இருக்கிறது. 99 ஏக்கர் நிலம் அவரது மாமனார் பழனி 2015 இல் 80 லட்சத்துக்கு வாங்கி அதே ஆண்டில் டிரஸ்டுக்கு தானமாக கொடுக்கிறார். அந்த நிலப் பத்திரங்களை வைத்து 15 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டிருக்கிறது

ஹோட்டல் ஹில்ஸ் ஓசூர் என்ற மிகப்பெரிய ஹோட்டல் ஓசூரில் சிப்காட்டின் நிலத்திலும் அவருடைய நிலத்திலும் சேர்த்து கட்டப்பட்டிருக்கிறது. இதில் வீரமணியின் நிறுவனத்தின் பெயரில் கட்டப்பட்டிருக்கிறது. சிப்காட் நாலாயிரம் சதுர அடி நிலத்தை 99 வருடங்களுக்கு ஒரு வருடத்துக்கு ஒரு ரூபாய் லீஸுக்கு முன்னாள் அமைச்சரின் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நிலத்தின் வழிகாட்டு மதிப்பே 35 லட்சம் ரூபாய். இதன் மீது 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹோட்டல் கட்டப்படுகிறது. அந்த நிறுவனத்துக்கு எவ்வித வருமானம் இல்லை. ஆனால் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹோட்டல் கட்டப்பட்டது எப்படி? சிப்காட்டின் நிலம் ஒரு வருடத்துக்கு ஒரு ரூபாய் லீஸ் என்று கொடுக்கப்பட்டது அதிகார துஷ்பிரயோகம்.

ஏலகிரி மலையில் 9 ஏக்கர் நிலம் வெறும் ஒரு கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கப்பட்டிருக்கிறது. இதை சப் ரிஜிஸ்டிராரே எதிர்த்திருக்கிறார். ஆனாலும் துறை அமைச்சரான கே.சி.வீரமணியால் இது பதிவு செய்யபப்ட்டுள்ளது.

2011 முதல் 2021 வரை பொது ஊழியராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த கால கட்டத்தில் தன் வருமானத்துக்கு அதிகமாக 76.65 கோடி ரூபாய்க்கு சொத்துகளை குவித்துள்ளார். இதெல்லாம் கட்டுப்படுத்தப்பட்ட மதிப்பீடு ஆகும்.மார்க்கெட் ரேட்டை மதிப்பிட்டால் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் புகார் கொடுத்திருக்கிறோம்.

லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக இதுகுறித்து கே.சி.வீரமணி அவரைச் சார்ந்தவர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்தது மட்டுமல்ல தனது அமைச்சகத்தையே துஷ்பிரயோகம் செய்து அவர் சொத்து சேர்ப்பதற்காக மக்களுக்கு வரி இழப்பு ஏற்படுத்தியுள்ளார்” என்று கூறினார் ஜெயராம் வெங்கடேசன்.

-வேந்தன்

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

செவ்வாய் 17 ஆக 2021