மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

ஆப்கன்- கடந்த காலத் தவறுகளை செய்ய மாட்டோம்: ஜோ பிடென்

ஆப்கன்- கடந்த காலத் தவறுகளை செய்ய மாட்டோம்:  ஜோ பிடென்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட அந்நாடு முழுவதையும் தாலிபான் பயங்கரவாத இயக்கம் கைப்பற்றிவிட்ட நிலையில், அதன் தாக்கம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இந்தியா முதல் ஐரோப்பிய நாடுகள் வரை எதிரொலித்திருக்கிறது.

2001 ஆம் ஆண்டு  அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனுக்கு  தாலிபான் பயங்கரவாதிகள் ஆப்கனில் அடைக்கலம் கொடுத்த நிலையில் ஒசாமாவை கொன்று தாலிபான்களையும் ஒடுக்கியது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ராணுவம். இருபது ஆண்டுகள் கழித்து இன்று அமெரிக்க தூதரகத்தின் அதிகாரிகள் தாலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்த காபூலில் இருந்து வேகமாக தப்பித்துச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலிலும் ஆப்கான் முக்கிய பிரச்சினையாக வெடித்துக் கொண்டிருக்கிறது. புதிய அதிபர் ஜோ பிடென் ஆப்கான் விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்று அங்கே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று  (ஆகஸ்டு 17) இரவு 1.15 மணிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடென் ஆப்கானிஸ்தான் பற்றி தன் மௌனத்தைக் கலைத்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இருந்து தொலைக்காட்சி உரையாற்றிய அவர், "எனது முடிவுக்குப் பின்னால் நான் உறுதியாக நிற்கிறேன். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற இது சரியான நேரமில்லை என்றாலும் திரும்பப் பெறுவதில் நான் உறுதியாக இருக்கிறேன். அமெரிக்க துருப்புக்கள் வெளியேறினாலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடரும்.

இப்போதைய ஆப்கானிஸ்தான் நிலைமைக்கு இருபது ஆண்டுகளாக அங்குள்ள ஆப்கான் ஆட்சியாளர்களும், ராணுவமுமே காரணம்.  அவர்களே ஆப்கானிஸ்தானை தாலிபான்களிடம் விட்டுக் கொடுத்துவிட்டனர். சில பகுதிகளில் ராணுவம் நிலைகுலைந்து போய் தாலிபான்களுடன் போரிடவே இல்லை.

அவர்களின் சொந்த எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் நாங்கள் அவர்களுக்கு வழங்கினோம். அந்த எதிர்காலத்திற்காக போராடுவதற்கான விருப்பத்தை எங்களால் அவர்களுக்கு வழங்க முடியவில்லை,.

ஆப்கானிஸ்தானை கட்டியெழுப்புவதையோ அங்கு ஜனநாயகத்தை நிறுவுவதையோ அமெரிக்கா என்றைக்கும் தன் வேலையாக வைத்திருக்கவில்லை. இன்னொரு முறை பயங்கரவாத தாக்குதல் அமெரிக்க மண்ணில் நிகழாமல் தடுப்பதற்கே நாம் அங்கே இருந்தோம். 

நமது தேச (அமெரிக்க) நலனில்லாத மோதலில் ராணுவத்தினரை காலவரையின்றி தங்க வைத்து போராடுவது, ஒரு வெளிநாட்டு நாட்டில் உள்நாட்டுப் போரை இரட்டிப்பாக்குவது, அமெரிக்கப் படைகளின் முடிவற்ற ராணுவப் பாதுகாப்பு மூலம் ஒரு நாட்டை ரீமேக் செய்ய முயற்சிப்பது ஆகிய கடந்த காலத் தவறுகளை இனி செய்ய மாட்டோம்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடென் கூறியிருக்கிறார்.

-வேந்தன்

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

செவ்வாய் 17 ஆக 2021