மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

பாஜகவுக்குச் சென்றால் மட்டும் விட்டுவிடுவோமா?: அமைச்சர் நாசர்

பாஜகவுக்குச் சென்றால் மட்டும் விட்டுவிடுவோமா?: அமைச்சர் நாசர்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவுக்குச் சென்றாலும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்று பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும், பச்சிளம் குழந்தைகளின் அடிப்படைத் தேவையான பால் விநியோகத்தில் பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி ஊழல் செய்ததாகவும், ஆவின் நியமனங்களில் ஊழல் செய்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

தற்போது திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். இந்தச் சூழலில் அண்மையில் டெல்லி சென்ற ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் நேற்று திருவள்ளூரில் நேரடி கொள்முதல் நிலையத்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நாசரிடம், 'ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகிறது' என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதில் அளித்த அவர், 'பாஜகவுக்குச் சென்றால் மட்டும் விட்டுவிடுவோமா என்ன? தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை ஆளுநரிடம் கொடுத்துள்ளார். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு பின்வாங்குவதாக ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, திமுக அரசின் திட்டங்களை சாதாரண மக்களும் பாராட்டுவதால், எல்.முருகன் பொறாமை காரணமாக அது போன்ற கருத்தை தெரிவித்துள்ளார்என்று விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர் நேரடி கொள்முதல் விவசாயிகளிடம் மூட்டைக்கு அதிக கட்டணம் வசூலித்தால், தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 46 கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இது 62 ஆக உயர்த்தப்பட உள்ளது என்றார்

-பிரியா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

செவ்வாய் 17 ஆக 2021