மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 ஆக 2021

முதல்வர் மீதான அவதூறு வழக்குகள்: அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

முதல்வர் மீதான அவதூறு வழக்குகள்: அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கைத் திரும்பப் பெறுவதற்கு சென்னை உயர் நீதிமன்ற ஒப்புதலைப் பெறும்படி தமிழ்நாடு அரசுக்குச் சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி பற்றிய மக்களின் மனநிலை குறித்தும், வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில் மீன்வளத் துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து இருவரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி அவர்கள் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் திமுக தலைவர் ஸ்டாலின் மீது தமிழ்நாடு அரசு இரு அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தன.

இந்த இரு அவதூறு வழக்குகளிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராகும்படி, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்குகள் நேற்று (ஆகஸ்ட் 16) நீதிபதி சிவக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு உட்பட 130 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற முடிவெடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு முன்பாக உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலை பெற்று வாருங்கள் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் மீதான 130 அவதூறு வழக்குகளை ரத்து செய்து கடந்த ஜூலை 30ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

செவ்வாய் 17 ஆக 2021