மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆலோசகராக முன்னாள் ஐஏஎஸ்!

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆலோசகராக முன்னாள் ஐஏஎஸ்!

தமிழ்நாடு அரசின் மின் ஆளுகைத் துறைக்குட்பட்ட டிஜிட்டல் மற்றும் நிர்வாக நடைமுறை எளிமையாக்கல் நடவடிக்கைகளுக்கான ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு சேவை மையங்களின் வலையமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் அரசு வழங்கும் சேவைகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல், ஒருங்கிணைத்தல், மேம்படுத்துதல் போன்ற பணிகளைத் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை செய்து வருகிறது. தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை செயல்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு நேற்று (ஆகஸ்ட் 15) வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாட்டில் வெளிப்படையான ஆட்சி நிர்வாகத்தை மேற்கொள்ளும் வகையில் மின் ஆளுமை நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும். அதன் மூலம் அரசின் சேவைகளை எங்கும், எப்போது வேண்டுமானாலும் பெற முடியும். அதைதான் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சமீபத்தில் ஆளுநர் சட்டப்பேரவையில் பேசினார்.

அரசின் செயல்முறைகள் மற்றும் நடைமுறைகளில் பெரிய அளவிலான டிஜிட்டல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அதற்காக டிஜிட்டல் மற்றும் நிர்வாக நடைமுறை எளிமையாக்கல் நடவடிக்கைகளுக்கான அரசின் ஆலோசகராக ஒருவரை நியமிக்க வேண்டும் என்று மாநில மின் ஆளுகை துறையின் ஆணையர் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

தகவல் தொழில்நுட்பத் துறையிலும், பிற துறைகளிலும் பணியாற்றிய அனுபவம் கொண்ட மூத்த அதிகாரியை அப்பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த கோரிக்கை கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு, அப்பொறுப்புக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதாரை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் கெளரவ பதவி. கூடுதல் தலைமைச் செயலருக்கான அனைத்து வசதிகளும், அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதற்கான நிதியை மின்னாளுமை இயக்ககம் ஒதுக்க வேண்டும். இவர் மின் ஆளுமையில் அரசுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் சென்னை, மதுரை மாநகராட்சி ஆணையராகவும், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

திங்கள் 16 ஆக 2021