மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

வெள்ளை அறிக்கையைத் தொடர்ந்து பிடிஆரின் அடுத்த அறிவிப்பு!

வெள்ளை அறிக்கையைத் தொடர்ந்து பிடிஆரின் அடுத்த அறிவிப்பு!

நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து பேரவையில் விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார், கடந்த ஆட்சியில் பொருளாதார நெருக்கடியிலும் விலையில்லா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்றும் நிதிநிலை அறிக்கை குறித்தும் பேசினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக நிதி ஒதுக்காததால், செயல்திறன் குறைந்ததாலும் உற்பத்தி அதிகரித்து பணவீக்கம் அதிகமாகி உள்ளது. மாநில உற்பத்தி கடனை 18 சதவிகிதத்திலிருந்து 15.7சதவிகிதமாகக் கலைஞர் ஆட்சியில் குறைக்கப்பட்டது. அதன்பின் ஜெயலலிதா இருந்த போது கூட ஒரு சதவிகிதம் குறைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சியில் 27 சதவிகிதமாக உற்பத்தி கடன் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலையில் ஒரு ரூபாய்க்கான மதிப்பையும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு ரூபாய்க்கான மதிப்பையும் ஒப்பிட்டுக் கணக்கிடக் கூடாது. கடந்த ஆட்சியில் விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு, செயல்படுத்தப்பட்ட திட்டம் மற்றும் செயல்படுத்தப்படாத திட்டம் ஆகியவை குறித்து பேரவையில் விரைவில் அறிவிக்கப்படும்" என்று கூறினார்.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

திங்கள் 16 ஆக 2021