மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

2 ஐஜிக்கள் உட்பட 7 பேர் ட்ரான்ஸ்ஃபர்!

2 ஐஜிக்கள் உட்பட 7 பேர் ட்ரான்ஸ்ஃபர்!

தமிழகத்தில் இன்று 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

அதுபோன்று இன்று 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாகப் பதவியிலிருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய், தமிழ்நாடு சிறப்புப் படை 6ஆவது பட்டாலியன் பிரிவு (மதுரை) கமான்டண்ட்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ரயில்வே எஸ்.பி.யாக இருந்த தீபா சத்யன் , ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறப்புப் படை 6ஆவது பட்டாலியன் பிரிவு (மதுரை) கமான்டண்ட்டாக இருந்த இளங்கோ ரயில்வே (சென்னை) எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் கடலோரப் பாதுகாப்புக் குழு எஸ்.பி.யாக இருந்த ஜெயந்தி மாற்றப்பட்டு, அமலாக்கப் பிரிவு (சேலம் மண்டலம்) எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமலாக்கப் பிரிவு (சேலம் மண்டலம்) எஸ்.பி.யாக இருந்த மகேஷ்குமார் மாற்றப்பட்டு, நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு -II (நிதி நிறுவனங்கள்) ஐஜியாக இருந்த கல்பனா நாயக் மாற்றப்பட்டு, சென்னை ரயில்வே ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கல்வி விடுப்பிலிருந்த அபின் தினேஷ் மோதக், சென்னை பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

திங்கள் 16 ஆக 2021