மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க மட்டோம்: முதல்வர்!

வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க மட்டோம்: முதல்வர்!

தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து ஒருபோதும் பின் வாங்கமாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 3ஆவது நாள் அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 10 மணிக்கு அவை கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து 2021 - 2022ஆம் நிதியாண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான விவாதம் தொடங்கியது.

அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர், ஆர்.பி. உதயகுமார் விவாதத்தைத் தொடங்கினார்.

நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையைப் பார்த்தோம் என்று தெரிவித்த அவர், “மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் நிதிநிலை அறிக்கையைத் தயார் செய்யும் போது, குட்டி பூனையைத் தாய்ப் பூனையைக் கவ்வுவது போல் இருக்கவேண்டும். ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கை பூனை எலியைக் கவ்வுவது போல் இருக்கிறது.

எனக்குப் பொருளாதாரம் தெரியாது. ஆனால் மக்களின் பசியும் ஏழ்மையும் பற்றி தெரியும்.

அதிமுக ஆட்சியில் 715 திட்டங்களில் 537 திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிதி நிலையைக் காரணம் காட்டி வாக்குறுதிகளைக் கைவிட்டு விட வேண்டாம். இனியாவது வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றுமா” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தேர்தல் வாக்குறுதியிலிருந்து நாங்கள் பின் வாங்கியதாகப் பல கருத்துக்கள் பேசப்பட்டு வருகிறது.

100 நாட்கள் நிகழ்வுகளை எல்லாம் நாங்கள் தெளிவாகச் சொல்லி இருக்கிறோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலிருந்து எந்தக் காரணத்தைக் கொண்டும் பின்வாங்க மாட்டோம்.

வெள்ளை அறிக்கையிலும் நிதிநிலை அறிக்கையிலும் கூறியிருப்பது போல நகைக் கடன், பயிர்க் கடன் ஆகியவற்றை ரத்து செய்வதிலும் பல முறைகேடுகள் குளறுபடிகள் கடந்த ஆட்சியில் நடந்துள்ளன. அதைச் சரி செய்து எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்” என்றார்.

அதிமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் கடந்த முறை நிறைவேற்றப்பட்டதா என்று கேட்ட முதல்வர் ஸ்டாலின், செல்போன், ஆவின் பால் விலை 25 ரூபாய், ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர், குறைந்த விலையில் மளிகை பொருட்கள், அனைத்து பொது இடங்களிலும் வைஃபை, பட்டு ஜவுளி பூங்கா, சென்னை மோனோ ரயில் திட்டம் ஆகிய வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினார்.

-பிரியா

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

திங்கள் 16 ஆக 2021