மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 16 ஆக 2021

திமுக ஆட்சிக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்!

திமுக ஆட்சிக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்!

தமிழக அரசு ஊழியர்களின் அக விலைப்படி உயர்த்தப்படாததைக் கண்டித்து அரசு அலுவலகங்கள் எதிரில் இன்று (ஆகஸ்டு 16) போராட்டம் அறிவித்திருக்கிறார்கள் அரசு அனைத்துத் துறை ஊழியர்கள்.

கடந்த அதிமுக ஆட்சி அரசு ஊழியர்களுக்கு எதிராகச் செயல்பட்டது என்று குற்றம் சாட்டி பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகள் திமுகவுக்கு ஆதரவளித்தன. தேர்தலில் திமுகவும் ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்நிலையில், கடந்த காலத்தில் அரசு ஊழியர்களின் பறிக்கப்பட்ட சலுகைகளை திமுக ஆட்சி மீண்டும் கொடுக்கும் என்ற நம்பிக்கையிலிருந்தனர் அரசு ஊழியர்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்த ஆட்சி, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (டி ஏ) மறுத்துள்ளதாக சொல்கிறார்கள் அரசு ஊழியர் அமைப்புகள்.

“நாட்டின் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு ஆறு மாத காலத்துக்கு ஒருமுறை அகவிலைப்படி (பஞ்சப்படி)யை அரசு ஊழியர்களுக்கு அரசுகள் உயர்த்திக் கொடுக்கும். கடந்த ஆண்டு 2020இல் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி 2021 ஜூலை மாதம் 1ஆம் தேதி வழங்கப்படும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி, அதன்படி இந்த ஆண்டு வழங்கிவிட்டார்.

அதேபோல தமிழக அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கவேண்டிய 11% சதவீதம் அகவிலைப்படியை இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாதம் வழங்க வேண்டிய அகவிலைப்படியை 2022 ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வழங்குவதாக அறிவித்திருப்பது, அரசு ஊழியர்கள் தலையில் இடி விழுந்ததுபோல் உள்ளது” என்கிறார்கள் அரசு ஊழியர்கள்.

அனைத்துத் துறை அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜனார்த்தனன், “திமுக ஆட்சியின் அறிவிப்பு அரசு ஊழியர்களை நிலைகுலைய வைத்துள்ளது, பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வால் அரசு ஊழியர்களின் குடும்பத்தார்களின் மாதந்தோறும் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்படுகிறது, வட்டிக்குக் கடன் வாங்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதை நிதி அமைச்சர் செலவு என்று சொல்கிறார், அது தவறான கருத்து, அரசு ஊழியர்களுக்குக் கொடுப்பதை முதலீடு என்று சொல்ல வேண்டும்,

நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய அகவிலைப்படியை தமிழக அரசு வழங்கவில்லை என்றால் அரசு ஊழியர்களின் போராட்டம் வேகமெடுக்கும், நிதி அமைச்சர் அறிவிப்பு வெளியானதும் முதல் கட்டமாகக் கடந்த 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் செய்தோம். இன்று ஆகஸ்ட் 16ஆம் தேதி, திங்கள் கிழமை தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் எதிரில் போராட்டம் செய்யத் திட்டமிட்டுள்ளோம், அரசு ஊழியர்களை அடுத்தடுத்த போராட்டங்களுக்குத் தள்ளவேண்டாம் எனக் கோரிக்கையாக முதல்வருக்கு வைக்கிறோம்” என்றார்.

அரசு ஊழியர்களின் கட்சி என்ற மற்ற தரப்பினரிடம் பெயரெடுத்த திமுக இப்போது அரசு ஊழியர்களாலேயே முதல் போராட்டத்தை சந்திக்க இருக்கிறது.

-வணங்காமுடி

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

திங்கள் 16 ஆக 2021