மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

மீண்டும் தாலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான்

மீண்டும் தாலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றவே முடியாது என்று கடந்த ஜூலை மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளித்த பேட்டியை பொய்யாக்கி... ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தவிர அனைத்து பகுதிகளையும் தாலிபான்கள் கைப்பற்றியிருந்தனர். இன்று (ஆகஸ்டு 15) காபூலுக்குள் நுழைந்துவிட்ட தாலிபான்கள் அந்நாட்டு அரசாங்கத்தின் நிபந்தனையற்ற சரணடைதலை நிபந்தனையாக வைத்துள்ளனர். இதையடுத்து காபூலில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வெளியேறிவிட்டனர்.

2001 இல் தாலிபான்களை அகற்றி ஒசாமா பின் லேடனை கொன்று அமெரிக்காவில் தன் ஆதரவு ஆட்சியை நிலை நிறுத்திய அமெரிக்கா இருபது வருடங்களுக்கு மின் மீண்டும் ஆப்கானில் இருந்து வெளியேறுகிறது.

ஏற்கனவே நடத்தியதை போல தாலிபான்கள் கொடூரமான சித்ரவதை ஆட்சியை நடத்துவார்கள் என்று அஞ்சும் பொதுமக்கள் ஏ.டி.எம். மெஷின்களில் பணத்தை எடுத்துக் கொண்டு காபூலில் இருந்து ஒடிக் கொண்டிருக்கிறார்கள்.

தாலிபான்கள் காபூலை நெருங்கிக் கொண்டிருந்த நேரம் இன்று பகலில் காபூலில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் தூரகத்தை விட்டு ஹெலிகாப்டர்களில் அவசரமாக வெளியேறினார்கள். அதேநேரம் அமெரிக்க தூதரகத்தில் இருந்த முக்கியமான் ஆவணங்கள் தீக்கிரையாக்கப்பட்டதால் புகை மண்டலாக இருந்தது என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

சுமார் இருபது ஆண்டுகளாக ஆப்கானில் முகாமிட்டிருந்த அமெரிக்க, ஐரோப்பிய படைகளை தாண்டி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆப்கன் முழுதையும் தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். ஆகஸ்டு 15 ஆம் தேதி காபூலின் புறநகர் பகுதிக்குள் தாலிபான்கள் நுழைந்தனர்,

தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கத்தாரின் அல்-ஜசீரா ஆங்கில சேனலிடம் பேசியபோது "காபூல் நகரில் அமைதியான அதிகாரமாற்றத்திற்காக காத்திருக்கிறோம்" என்று கூறினார். அவர் தனது படைகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் சாத்தியமான பேச்சுவார்த்தைகள் குறித்த விவரங்களை வழங்க மறுத்துவிட்டார். ஆனால் தாலிபான்கள் ஆப்கன் அரசாங்கத்தின் நிபந்தனையற்ற சரணடைதலை விரும்புவதாகக் குறிப்பிட்டார். தாலிபான்களுக்கும், ஆப்கன் அரசுக்கும் கத்தார் நாட்டில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மேலும், "யாருடைய உயிருக்கும், சொத்துக்கும், கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படாது, காபூல் குடிமக்களுக்கு ஆபத்து இல்லை" என்று தாலிபான்கள் இன்னொரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியர்களை ஏற்றிக் கொண்டு ஏர் இந்தியா விமானம் இன்று டெல்லி திரும்புகிறது.

ஆப்கானிஸ்தானில் நடக்கும் ஆட்சி மாற்றம் ஆசியாவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் மோடி தலைமையிலான இந்திய அரசு இதை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

ஞாயிறு 15 ஆக 2021