மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி: அன்பில் மகேஷ்

அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி: அன்பில் மகேஷ்

பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இதன்மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ள படி, செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்துச் சிறந்து விளங்கிய சாரண சாரணிய ஆசிரியர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இரு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டனர். இருப்பினும் பள்ளிகள் திறக்க உள்ள சூழலில் தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் இரு தவணை தடுப்பூசி போட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி போட முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி சுகாதாரத் துறை உதவியுடன் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

50 முதல் 60 சதவிகித வரையிலான பாடத் திட்டம் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் குறைக்கப்பட்டது. பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டாலும் மாணவர்கள் அடிப்படையில் தெரிந்து கொள்ளத் தேவையான அனைத்து பகுதிகளும் ஆசிரியர்களின் சார்பில் கற்றுக் கொடுக்கப்படும்.

கொரோனா கால கட்டத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாத நிலையில் விரைவில் அதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 15 ஆக 2021